விதி

Ani Logo
மே - ஜூலை 2008

விதி
பொன். குமார்

சாலைகளில் விபத்து
சகஜம்.
உடனடியாக
அப்புறப்படுத்தப்படுகின்றன
மனித சடலங்கள்.
நாயுடல்கள் விதிவிலக்கு
அதிகபட்சம்.
இறப்பு எல்லாவுயிர்க்கும்
பொது.
நாய்க்கு மட்டும்
வாகனமே எமன்.
ஒவ்வொரு முறை பயணத்திலும்
சாலையில் காண நேர்கிறது
நசுங்கி கிழிந்து
இரத்தமும் குடலுமான
நாயின் சடலம்.
நாய்கள்
நல்லவையானாலும்
மனிதர்களை திட்ட
மலிவான சொல்
அதுவே.
சாலையிலும்
சொல்லிலும்
அதிகம் அடிப்படுவது
நாயாகவேயுள்ளது.
குறைந்த பட்சம்
மனிதர்களைத் திட்ட
நாயைப் பயன்படுத்தாமலிருப்பதே
நன்றியாகும்.

1 comment:

  1. விடுங்க சார் மனிதன் அப்படியாவது பெருமை பட்டுகொள்ளட்டும்

    ReplyDelete