![]() | |||||
![]() | |||||
| ஆகஸ்டு 2008 | |||||
![]() | |||||
பொன். குமார்
தொடர்ந்து தொம்பறையை பயன்படுத்தியவர்களின் நேர்காணலையும் அவர்களின் எண்ணங்களையும் பதிவுசெய்து காட்டி தொம்பறையின் உபயோகத்தைப் புரியச் செய்துள்ளார். காலத்தால் பல அழிந்து வந்தாலும், அழிக்கப்பட்டு வந்தாலும் தற்போதுள்ளவைகளை காட்சிப்படுத்திக் காட்டியுள்ளார். அழியும் நிலையில் இருப்பவைகளைக் காணும்போது மனம் கவலையுறுவதை உணரமுடிகிறது. 'தொம்பறை' அழிந்து வருவதற்கு பாகப்பிவினை ஒரு காரணம் என்றும் விளைச்சல் இல்லாதது மற்றொரு காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார். 'தொம்பறை'யை 'தானியவீடு' என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. 'தொம்பறை'க்குள் இறங்கும்போதோ அல்லது தானியம் எடுக்கும் போதோ ஆண்களாயிருப்பவர் மது அருந்தக்கூடாது என்றும், பெண்களாயிருந்தால் தீட்டு காலமாக இருக்கக்கூடாது என்றும் பேச்சின் வழியே தெரிகிறது. தொம்பறையை மக்கள் வழிபட்டனர் என்றும் பெண்கள் சிலருக்கு தொம்பறையம்மா என பெயர் இடப்பட்டதையும் சுட்டுகிறது.
தானியக்குழிகள், களஞ்சியங்கள், மண் தொம்பறை, காமரா, மாசல் குலுக்கைகள், பெரிய மண்பானைகள் என தொம்பறையில் பல வகைகள் உள்ளதையும் ஆவணப்படம் காட்டுகிறது. ஆனால் 'குதிர்' என்னும் சொல் பயன்படுத்தப்படுகிறது. பூமிக்கு மேலும் பூமிக்கு அடியிலும் தொம்பறைகள் அமைக்கப்படுகின்றன என்றும் உணர்த்துகிறது. பிற்காலங்களில் பெண்கள் பானைகளில், மொடாக்களில், 'சிறுவாடு' என்னும் சேமிப்பு பழக்கம் ஏற்பட்டதையும் நினைவுக் கூரச் செய்கிறது. சோளம், திணை, நெல், சாமை ஆகிய தானியங்கள் சேமிக்கப்படுவதையும் சொல்கிறது.
தாசப்பிரகாஷின் ஒளிப்பதிவு 'தொம்பறை'யைத் தெளிவாய்க் காட்டுகிறது. ஜெகதீஸ் கார்த்திக்கின் படத்தொகுப்பும் தொய்வு ஏற்படுத்தவில்லை. ஜெ. ராஜேஸ்குமாரின் இசையும் சிந்தனையைச் சிதறடிக்காமல் கொண்டு செல்கிறது. அ. மன்னர் மன்னனின் வர்னணையும் 'தொம்பறை' மீதுள்ள ஆர்வத்தைக் காட்டுகிறது. 'திரைத்தொனி' சார்பாக எழுதி இயக்கி இருப்பவர் புவனராஜன். தொம்பறை என்னும் தானிய சேமிப்பு அழிந்து வருவதைக் கண்டு வருந்தி ஆவணப்படுத்தியுள்ளார் புவனராஜன். பழைமையைப் போற்ற வேண்டும், பாதுகாக்க வேண்டும் என்னும் எண்ணம் வெளிப்பட்டுள்ளது. இருப்பவர்களுக்கு நினைவுக்கூர்ந்துள்ளார். எதிர்கால சந்ததியினருக்கு காட்சிப்படுத்திக் காட்டியுள்ளார். நல்ல முயற்சி.


No comments:
Post a Comment