ஹைக்கூ

கைத் தட்டலில்
வயிறு நிறைய வில்லை
கவலையில் கூத்தாடி.

மறைந்திருக்கிறது
உழைக்கும் கைகளில்
அதிர்ஷ்ட ரேகை.

முளைத்துள்ளன
இலையுதிர்த்த மரத்தில்
கட்சிக் கோடிகள்.

குடும்ப பாரம்
அடிக்கடி சுமக்கிறது
கட்டில்.

ஒரு பறவை
பறந்த படியே
மரமில்லை.

தள்ளாடுகிறது
நடத்த முடியவில்லை
முதியோர் இல்லம்

No comments:

Post a Comment