மொய் வைப்பது
முன்னோர்கள் பழக்கம்.
உறவுகளுக்குள்
உரிமையாக இருந்தது.
ஊருக்குள் விரிவடைந்து
வைப்பதும் வாங்குவதும்
தொடர்கதையாகியது.
வட்டி இல்லா கடன் என்று
வரவு செலவு செய்யப்பட்டது.
நாகரீக வளர்ச்சியில்
அன்பளிப்பு என்றானது.
நிகழ்ச்சிக்காக மொய் என்பது
நாளடைவில் மாறி
மொய்க்காக ஏற்பாடு செய்யப்பட்டது
நிகழ்ச்சி.
மொய்யை நம்பியே
கடன் வாங்கியும் நடத்தப்படுவதுண்டு.
மொய் வரும் இடத்திலேயே
முக்கியமாக வைக்கப் படும்
அழைப்பிதழ்கள்.
புது மொய் எனில்
பூரிக்கும் உள்ளம்.
வைத்த மொய் வராத போதே
விரிசல் உறவில் நட்பில் ஏற்படும்.
விரோதமும் எழும்.
உறவு நீடிப்பதும் துண்டிப்பதும்
வரவான மொய்யை வைத்தே
முடிவெடுக்கப்படும்.
மெய்
ReplyDelete